search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலூர் கலெக்டர் எச்சரிக்கை"

    வேலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று கலெக்டர் ராமன் எச்சரித்தார். #Plasticban
    வேலூர்:

    தமிழகத்தில் 2019 ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், தயாரிக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், உதவி கலெக்டர் மேகராஜ், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர் பாரதிதாசன் உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதவாது:-

    பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை குறித்து பொதுமக்களிடம் உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்க வேண்டும்.

    துணி பைகள், காகித உறை போன்ற மக்கும் பிளாஸ்டிக் பொருட்களையே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்கு பிறகு யாரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு, விற்பனை குறித்து தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராமன் எச்சரித்தார். #Plasticban

    ×